Welcome To Minitamil.Blogspot.Com

விவாகரத்து வழக்குகளை விரைவில் முடிக்க புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. இதன்படி, விவாகரத்து கேட்ட த‌ம்ப‌தி‌யின‌ரி‌ல் ஒருவர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு வராமல் இழுத்தடித்தாலும் மற்றவருக்கு விவாகரத்து கிடைத்து விடும் வகை‌யி‌ல் ச‌ட்ட‌ம் அம‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ளது.

‌பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமை‌‌ச்சரவை‌க் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாடு முழுவதும் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்குகளை விரைவில் முடிக்க வகை செய்வதற்காக, இந்து திருமண சட்டம் மற்றும் விசேஷ திருமண சட்டத்தில் திருத்தம் செய்து, திருமண சட்ட (திருத்த) மசோதா, 2010 என்ற புதிய மசோதாவைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, கணவன்-மனைவி இருவரும் மீண்டும் ஒன்றுசேர முடியாத அளவுக்கு திருமண உறவில் முறிவு ஏற்பட்டால், அதை விவாகரத்துக்கான காரணமாக கருத வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, பிரிந்து வாழ்பவர்கள் விவாகரத்து பெற வழி பிறக்கும்.

மேலும், கணவன் அல்லது மனைவி கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டி விவாகரத்து கோரி ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுகும்போது எதிர்தரப்பு நபர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜராகாமல் விவாகரத்து வழக்கை நீட்டிக்கச் செய்யும் நிலையில், சம்பந்தப்பட்ட நபருக்கு விவாகரத்து கிடைக்க இந்த சட்ட திருத்தம் உதவும்.

தற்போது, பல்வேறு காரணங்களால் திருமணம் செல்லாது என அறிவித்து விவாகரத்து செய்வதற்கான வசதி இந்து திருமண சட்டம் 13-ல் இடம்பெற்றுள்ளது. கொடுமைப்படுத்துதல், தனிமைப்படுத்துதல், வேறு ஒரு மதத்துக்கு மாறுதல், மன வருத்தம் ஏற்படுத்துதல், தொழுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள், பால்வினை நோய்கள் அல்லது தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போகுதல் போன்ற காரணங்களால் விவாகரத்துக்கு அனுமதி அளிக்க இந்த சட்டப்பிரிவு வகைசெய்கிறது.

இதே போன்ற காரணங்களால் விவாகரத்து அளிக்க வகைசெய்யும் பிரிவு, விசேஷ திருமண சட்டம் 1954-லும் இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்து திருமண சட்டம் 13பி மற்றும் விசேஷ திருமண சட்டம் பிரிவு 28 ஆகியவை விவாகரத்து கோரும் மனுதாக்கல் செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள்ளாக ‌திரு‌ம்ப‌ப் பெறப்படாமல் இருந்தாலோ, அல்லது 18 மாதங்களுக்கு பிறகோ பரஸ்பர ஒப்புதலுடன் ‌நீ‌தி‌ம‌ன்ற‌‌ம் விவாகரத்து அளிக்க வகைசெய்கிறது.

அதே சமயத்தில், பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்ய ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுகி, சம்பந்தப்பட்ட யாரேனும் ஒருவர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு வராமல் இருந்தால், அந்த வழக்கு முடிவுக்கு வராமல் இருக்கும் நிலை உள்ளது. இதனால் விவாகரத்து கோருபவர் விவாகரத்து கிடைக்காமல் திண்டாடும் நிலை உள்ளது. எனவே, இத்தகைய திருத்தம் தேவை என்று சட்ட ஆணைய‌ம் தனது 217-வது அறிக்கையிலும், உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் 2 வழக்குகளிலும் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!