Welcome To Minitamil.Blogspot.Com

வெண்ணிலா கபடி குழு மூலம் கிராமத்தின் யதார்த்த முகத்தை காட்டிய சுசீந்திரன், இப்போது, நான் மகான் அல்ல மூலம் நகர்புற களத்தில் இறங்கியிருக்கிறார்.

ரஜினி பட தலைப்பு ஏன்?
நிறைய பேர் இதைக் கேட்டுட்டாங்க. வெண்ணிலா கபடி குழு என்று யதார்த்தமாக பெயர் வச்சவனுக்கு புதுசா பெயர் கிடைக்கலை யான்னு கேட்குறாங்க; அது நியாயம்தான். தலைப்பு வைக்கிறதுல நான் கொஞ்சம் வீக்தான். இந்தப் படத்துக்கு, நான் மகான் அல்ல மாதிரி ஒரு தலைப்பு வேணும்னு தேடிக்கிட்டிருந்தப்போ, ஏன் தேடம்? அந்தப் பெயரையே வச்சிடலாமே’னு நண்பர்கள் சொன்னாங்க. வச்சுட்டேன்.

இரண்டாவது படத்திலேயே நகரத்துக்கு வந்துட்டீங்களே?
கலர்புல்லா, கமர்சியலா ஒரு படம் பண்ணணும்னு தோணுச்சு. வெ.க.குவில் ஒவ்வொரு கேரக்டருக்கு பின்னாலு ஒரு பிரச்னை இருந்திச்சு . ஆனா , இதுல ஹீரோவுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கிற நகர்புறத்து பையன். அப்படிப்பட்டவனோட வாழ்க்கையை ஒரு சம்பவம் திசை மாற்றிடுது. சென்னையில இப்படியும் நடக்குதாங்கிற ஷாக்கை படம் கொடுக்கும்.

வழக்கமான கதை மாதிரி தெரியுதே?
ஒரே மாதிரி கதை என்கிற வாக்கியத்தை நான் ஒப்புக்கறதில்லை. உலகத்துல கைரேகை எத்தனை வகை இருக்குதோ, அத்தனை கதை இருக்கு. ஆனா, பார்த்தா எல்லா கைரேகையும் ஒரே மாதிரி தோணும். அதுமாதிரிதான் கதை. சின்ன வித்தியாசமாவது கண்டிப்பாக இருக்கும். அந்தக் கதையை எப்படிச் சொல்றோம் என்பதுலதான் தனிப்பட்ட திறமை இருக்கு.

பல படங்கள்ல சென்னையை இஞ்ச் பை இஞ்சா காட்டிட்டாங்க. நீங்கள் புதுசா என்ன காட்டப்போறீங்க?
வெளிநாட்டில கூட ஈசியா படப்பிடிப்பை நடத்திடலாம். ஆனா, சென்னைல நடத்துறது சிரமம். அந்த அளவுக்கு நெருக்கடி. மக்கள் கூட்டம். விளம்பர பலகைகள், குப்பைகள், வாகன நெரிசல்னு எந்த இடத்துல ஷாட் வச்சாலும், இதுதான் பிரேமுக்குள் நிறையும். ஆனா, அதையும் அழகா காட்டியிருக்கிறார் கேமராமேன் மதி. அட இது இந்த இடமானு பார்க்கிறவங்க வியப்பாங்க. நீங்க பார்த்த சென்னையை, நீங்க பார்க்காத கோணத்துல காட்டுறோம்.

பையா கார்த்தி, இதுல எப்படி?
கார்த்தியின் முந்தைய படங்கள் வரை அவர்கிட்ட பருத்தி வீரன் சாயல் இருந்ததா, விமர்சனம் உண்டு. அதுல எனக்கு உடன்பாடு இல்லாட்டாலும் அந்த விமர்சனம் கூட வந்துடக்கூடாதுன்னு ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன். மத்த படத்துல அவர் கேரட்டர்ல நடிச்சார். இதுல வாழ்ந்திருக்கார். ஏன்னா அவருடைய நிஜமான சுபாவங்கள்தான் படத்தின் திரைக்கதையை நகர்த்தும்.

அப்படி இருந்தும் கூட, ஒரு வாரம் வரை ரிகர்சல் பண்ணித்தான் கேமரா முன்னாடியே நின்னார். கார்த்தியோட கேரியர்ல இந்தப்படம் நிச்சயம் முக்கியமான இடத்துல இருக்கும். ஹீரோயின் காஜல், இதுக்கு முன்னாடி தமிழ்ல சில படங்கள்ல நடிச்சிருந்தாலும், அவரை ரசிகர்களிடம் முழுமையா கொண்டு சேர்க்கும் படமா இது அமைஞ்சிருக்கு. அசினுக்கு கஜினி மாதிரி, காஜலுக்கு இந்தப் படம்னு அடிச்சு சொல்லலாம்.

1 Responses to பார்த்த சென்னை பார்க்காத கோணம் : சுசீந்திரன்!

  1. Anonymous Says:
  2. Hi,
    See the link

    http://alturl.com/rwty

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!