Welcome To Minitamil.Blogspot.Com

ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ‘பிங் பேங்’ எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.

அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம் பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (ஙண்ப்ந்ஹ் ரஹஹ் ஞ்ஹப்ஹஷ்ஹ்) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.

இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (ஐய்ச்ழ்ஹ ழ்ங்க்) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.

இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர் டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார்.

விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.

2 comments

  1. Gayathri Says:
  2. எத்தனை அருமையாய் இருக்கிறது...நம் போஒமியே நம் கண்ணனுக்கு தெரிய வில்லையே சூப்பர்..நன்றி

  3. Gayathri Says:
  4. பூமி

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!