Welcome To Minitamil.Blogspot.Com

சிறிய படங்களுக்கு தியேட்டர் தர தியேட்டர் அதிபர்கள் முன் வருவதில்லை. எனவே சிறு படங்கள் வெளி வர முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன. சிறிய படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான கே.பாக்யராஜ் ஒரு விழாவில் ரொம்பவே வருத்தப்பட்டார்.

சுறா படம் வசூலில் பின் தங்கியதும், தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு சிங்கம் வெளியிடப்பட்டது. சிங்கம் வசூலை அள்ளித் தந்த போதிலும் ராவணன் வெளியானதும் சிங்கம் தூக்கப்பட்டது. சென்னையில் ஒரே நேரத்தில் 20 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டு முதல் வாரத்திலேயே வசூலை அள்ளிவிட வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது.

“நடுத்தர ஏழை எளிய மக்கள் சினிமா தியேட்டரில் படம் பார்க்க வராததற்கு டிக்கெட் விலைதான் காரணம்.. இவ்வளவுக்கும் அரசு வரிச் சலுகையை முழுமையாக அளித்திருக்கிறது. அரசாங்க வரிச் சலுகை மக்களுக்குப் போய்ச் சேராமல் முழுவதுமாய் தியேட்டர் அதிபர்களுக்கே கிடைக்கிறது. இது என்ன நியாயம்..?

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தைக் குறைத்தால் மட்டுமே சினிமா பார்க்க மக்கள் வருவார்கள். படம் பார்ப்பதற்கும் இதுவே காரணமாகிவிட்டது. சின்னப் படத் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்வார் என்று நம்பியே இராம.நாராயணனை தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தலைவராக்கினோம். அவரும் செய்வதறியாமல் அவருடையே படமே பெருத்த நஷ்டத்தைக் கொடுத்ததால் பேந்த பேந்த முழிக்கிறார். அரசாங்க வரிச்சலுகை பொதுமக்களுக்குப் போய்ச் சேர்வில்லை என்றால் அதனால் பயனில்லையே..” என்கிறார் ஒரு சிறு படத் தயாரிப்பாளர்.

இப்போது பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதே சின்னப் படத் தயாரிப்பாளர்களிடையே கேள்விக்குறியாகிவிட்டது. பட பூஜைகள் தினந்தோறும் ஆடம்பரமாக நடக்கின்றன. படத்தின் இசை வெளியிட்டு விழாக்களும் தியேட்டரில் பந்தாவாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் சின்னப் படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் 200 கோடிக்கு மேல் முடங்கிவிட்டது. நட்சத்திர நடிகர், நடிகைகளோ இப்போதும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொள்கிறார்கள்.

வெளியில் இருந்து பார்ப்பதற்கு சினிமாவுலகம் பரபரப்பாகவும், பளபளப்பாகவும் தெரிந்தாலும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை..!

3 comments

  1. சினிமா தொழில் ரொம்ப ஏழையான தொழில் துக்கி நிறுத்த ஆட்கள் தேவை....

  2. If the film is good automatically it will succeed, example: Veyyil, kaadhal, paruthiveeran, sethu, subramaniyapuram, manmathan, autograph, angaaditeru.

    This theatre is not good, theatre not available are immaterial execuses.

  3. வாடிக்கையாளர்களை பற்றி கவலைப்படாத எந்த ஒரு நிறுவனமொ தொழிலொ நீண்டநாள் வாழ்வதில்லை- அவர்கள் (சினிமாவுலகம்) தவறுகள் தெடரும் போது நெருக்கடிகளும் தெடரும்-

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!