Welcome To Minitamil.Blogspot.Com

இளைஞர்கள் கையில் எதிர்காலம் என்ற கோஷத்திற்கு வள்ளுவர் கூறும் தகவல்..

சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது இளைஞர்களுக்கு முக்கியம் கொடுங்கள் என்ற கோஷம் வானைப்பிளந்தது..

அந்தக் கோஷமானது சற்று வயது கூடியவர்களை சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக கருதக்கூடிய அருவமான எதிர்விசையை உருவாக்கியதையும் அவதானிக்க முடிந்தது…

இளைஞர்களின் கைகளில் எதிர்காலம் என்ற பிரலாபிப்பு வந்த பின்னர் வெளிநாடுகளில் உள்ள வயதானவர்களில் பலருடைய கோஷம் இப்படியேதான் கேட்கிறது..

ஒரு வேளை தமது காலத்து ஆற்றலாளர்களை காயடிக்க இத்தகைய கோஷத்தை இவர்கள் கிளப்புகிறார்களா.. அல்லது உண்மையாகவே இது ஆத்மார்த்தமான கோஷமா..? என்ற மயக்கம் சமுதாயத்தில் நிலவுகிறது..

இந்தநிலையில் இளைஞர்களின் கையில் எதிர்காலமென்றால் என்ன.. அதனுடைய உட்பொருளை பேரறிஞர்கள் எப்படி விளக்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இறந்த காலம் என்பது முடிவடைந்துவிட்டது, எதிர்காலம் என்பது கானல் நீர்போல விரட்ட விரட்ட நகர்ந்து போவது என்றுமே கைகளுக்கு வராதது. நிஜம் என்பது நிகழ்காலம் ஒன்று மட்டும்தான் ஆகவே எதிர்காலம் ஒப்படைக்கப்பட முடியாதது என்பது பல மகான்களின் நூல்களில் காணப்படும் எளிமையான செய்தியாகும்.

இப்படியோர் உண்மை தெரிந்த காரணத்தாலோ என்னவோ மேலும் சிலர் ஒருபடி மேலே சென்று கோஷத்தில் உள்ள எதிர்காலத்தை வெட்டிவிட்டு முதலில் இளைஞர்களை பாராட்டுவோம் என்று சட்டெனக் கூறுகிறார்கள்.

வெளிப்பார்வைக்கு இது மிகச்சிறந்த வாதமாகத் தெரியும்..

ஆம்.. பாராட்டுவது உண்மையில் நல்ல விடயம்தான், அதில் யாரும் பிழைபிடிக்கமாட்டார்கள்.

இப்படி பிழை பிடிக்க முடியாத பாராட்டுதல்களை அடையாளம் காண வள்ளுவர் தனது குறளில் பல தகவல்களைத் தந்துள்ளார்.

இளைஞர்களை அதிரடியாக பாராட்டி மகிழ்வதோ அல்லது அவர்கள் கையில் எதிர்காலமென முழங்குவதோ சரியான வாதமல்ல என்று கூறும் வள்ளுவர் அதற்கான தனது வாதத்தை இப்படி முன் வைக்கிறார்.

ஒரு பிள்ளை கற்றவருடைய அவையில் இருப்பதற்குரிய தகுதியை சிறுபராயத்தில் இருந்தே வளர்த்து வரும் செயல் மட்டும்தான் இளைஞர்களை பாராட்டுவதற்குரிய உயர்ந்த செயல். அந்தச் செயலைச் செய்தால் கோஷங்கள் இல்லாமலே இளைஞன் பாராட்டு பெறும் இடத்திற்கு தானாக முன்னேறிவிடுவான்.

அப்படி அந்த இளைஞன் பாராட்டுப் பெறும் சிகரங்களைத் தொடும்போது.. அடடா இவனை இப்படியொரு சிகரத்திற்கு தூக்கிவிட்டவன் யாரென்று சமுதாயம் திரும்பிப் பார்க்கும் அப்போது அங்கே ஒரு முதியவன் பாராட்டுக்களுக்கு உரியவனாக நின்று கொண்டிருப்பான்.

எனவே பாராட்டு என்பது இளையோர்க்கு மட்டுமல்ல முதியோர்க்கும் இணைந்து வரவேண்டும், அதற்குரிய செயலை செய்வதே பாராட்டு என்பது வள்ளுவர் கருத்து.

மேலும் அவர் அதிலிருந்து ஒருபடி முன்னேறி ஒட்டுமொத்த திருக்குறளிலுமே இந்த விடயத்தையே எழுதாத செய்தியாகவும் பேசியிருக்கிறார்.

திருக்குறளில் அறம் – பொருள் – இன்பம் – வீடு ஆகிய நான்கு விடயங்களையும் பேசவந்த வள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று விடயங்களை மட்டும் பேசுகிறார். அவர் வீடுபேற்றைப்பற்றி ஒரு குறள்கூட எழுதவில்லை..

ஏன் ?

அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நெறிகளையும் நீங்கள் சிறுவயது முதலே சரிவரக் கடைப்பிடித்தால், வீடுபேறு தானாக உங்களுக்கு வரும். அது ஒரு நாளில் வழங்கப்படும் அட்சய பாத்திரமல்ல.. அது ஒரு நெடிய பணி..

ஒரே நாளில்; இளைஞர் கையில் எதிர்காலம் என்போரும், இனி இளைஞரே எல்லாம் என்போரும் யாதொரு முயற்சியிலும் ஈடுபடாமல் வீடுபேற்றை பேசித்திரியும் மதம் பரப்பும் பிரிவினருக்கு ஒப்பானவராகவே இருப்பார்கள்.

எனவேதான் ஒருவருடைய வளர்ச்சியில் பங்குபற்றாத பாராட்டுக்கள் குறித்து, இளைஞர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பது திருக்குறள் தரும் எழுதப்படாத செய்தியாகும்.

இளைஞர்களைப் போற்றுவோம் என்போர் குழந்தைகளை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஒரு குழந்தையின் மூளை என்ற – காட்டிஸ்க் – அதன் மூன்றில் ஒரு மடங்கை தாயின் கருவில் இருக்கும்போதே நிரப்பிவிடுகிறது. மிகுதி மூன்றில் ஒரு பங்கை ஐந்து வயதிற்குள் நிரப்பிவிடும். இறுதி மூன்றில் ஒரு பங்கை ஐந்து வயது முதல் இறக்கும்வரை மெல்ல மெல்லக் கற்க முயல்கிறது.

கடுகுபோன்ற ஓர் ஆலம் விதைக்குள் பிரமாண்டமான ஆலமரம் கிளைவிட்டு வளரக்கூடிய செய்தி பதியப்பட்டிருப்பதுபோலவே குழந்தைக்குள்ளும் அனைத்துச் செய்திகளும் பதிவாகி இருக்கிறது.

ஆகவே குழந்தைக்குள் பதியப்பட்டுள்ள தகவல்களை சுயமாக வெளிப்படச் செய்வது வரை அவர்களை வளர்தெடுக்கும் உதவிக்குள் அடங்கியிருப்பதுதான் இளைஞர் கையில் எதிர்காலம், இளைஞர்களைப் பாராட்டுவோம் என்ற பணிகளாகும்.

இளைஞர்களிடம் ஒப்படைப்பதென்பது யாரோ நான்கு இளைஞரைப் பிடித்துவந்து நீங்களே நமது செல்வங்கள் இதோ உங்கள் கையில் எதிர்காலம் என்று சொல்வதல்ல.. அது அவர்களைச் செல்வங்களாக்குவதற்குரிய நீண்ட செயற்பாடாகும்..

அந்தச் செயல் மேடையில் முழங்குவதற்குரியதல்ல.. சொல்வதற்குரியதல்ல.. செய்வதற்குரியதாகும்..

ஒவ்வொரு இளைஞனும் இதைப் புரிந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பது வள்ளுவர் போன்ற பேரறிஞர்கள் கருத்தாகும்.

0 comments

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!