இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி, தனது பள்ளி பருவ தோழி சாக்ஷி சிங் ராவத்தை நேற்று இரவு திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் ஹர்பஜன், நெஹ்ரா ஆகிய வீரர்கள் பங்கேற்றனர். டோனி & சாக்ஷியின் நிச்சயதார்த்தம் டேராடூனில் நேற்று முன்தின இரவு நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இவர்களது திருமணம், அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு பின்னர் நடைபெறும் என்று கூறப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனிக்கு திடீர் திருமணம் நடந்ததற்கு நடிகை அசின் காரணம் என்று கூறப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமின்றி, விளம்பரங்கள் மூலமாகவும் அவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அதனால், முன்னணி நடிகைகள், விளம்பர மாடல்களுக்கு அவர் மீது ஒரு கண். ஆரம்பத்தில் நடிகை லட்சுமி ராய் உடனான அவருடைய நட்பு பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்தி அடிபட்டது.
இந்நிலையில் நடிகை அசினுக்கும் டோனிக்கும் நெருக்கம் அதிகமானது. கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றுள்ள அசின், மும்பையில் உள்ள லோகந்வாலாவில் சொந்தமாக வீடு வாங்கி தங்கியுள்ளார். நடிகை அசினுடனான தொடர்பை டோனி குடும்பத்தினர் விரும்பவில்லை. இதுதொடர்பாக குடும்பத்துக்குள் பிரச்னை இருந்து வந்தது. இந் நிலையில்தான் அவசர அவசரமாக டோனியின் திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.


0 comments