இந்தி படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துள்ளார். மலையாளதஙிதில் வெளியான படம் ‘பாடிகார்ட்’. இப்படம் தமிழில் விஜய், அசின் நடிப்பில் ‘காவல்காரன்’ பெயரில் ரீமேக் ஆகிறது. இதை இந்தியிலும் தயாரிக்க உள்ளனர். சல்மான் கான் நடிக்கிறார். மலையாளம், தமிழ் படங்களை இயக்கிய சித்திக், இப்படத்தையும் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டது. ஏற்கெனவே ‘பாடிகார்ட்’ படத்தில் நயன்தாராதான் நடித்திருந்தார். ஆனால் இந்தி படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது தமிழில் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மலையாளத்தில் ‘எலெக்ட்ரா’விலும், கன்னடத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இது தவிர புது படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பிரபு தேவாவை விரைவில் அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும் அதனால் புது படங்களை ஏற்க அவர் மறுப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது கன்னட பட ஷூட்டிங்கிற்காக பெங்களூருக்கு சென்றுள்ளார் நயன்தாரா


0 comments