ஜெனிலியா, அனுஷ்கா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, காஜல் அகர்வால், ஹான்ஸிகா மோத்வானி உள்பட பல நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தமிழ்ப் படங்களில் நடித்தாலும், இன்னமும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் மேற்கண்ட நடிகைகள் அனைவருக்கும் நடிகர் சங்கத்தில் இருந்து நோட்டீஸ் பறந்திருக்கிறதாம்..
விரைவில் நீங்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக மாறாவிட்டால் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை தரப்பட்டுள்ளதாம்.
சம்பளம் மற்றும் கால்ஷீட் தேதிகளில் தயாரிப்பாளருக்கும், நடிகைகளுக்கும் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமேயானால் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே சங்கம் அதில் தலையிடு்ம் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments