இத்தாலியில் “மோனாலிசா” மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு?
இத்தாலியில் மோனாலிசா மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மாடலாக இருந்தார்.
கடந்த 1542-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து, ஒரு பெண்ணின் மண்டை ஓடும், இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது.
அவை அநேகமாக மோனாலிசா படம் வரைய மாடலாக இருந்த லிசா கெரார்டினியினுடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதை உறுதிப்படுத்த அவரது குழந்தைகளின் மண்டை ஓடுகளை வைத்து டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இவர்களின், உடல்கள் புளோரென்ஸ் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 comments