Welcome To Minitamil.Blogspot.Com

புதுடெல்லியில் காமல்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்னும் 3 மாதத்தில் நடைபெற உள்ளன. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகம் விறு விறுப்பாக செய்து வருகிறது.

இதன் தொடக்க விழாவுக்கு இந்தி நடிகர்- நடிகைளை அழைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்னாள் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி மணிசங்கர் அய்யர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். நடிகர்-நடிகைகளுக்கு பெருந்தொகைளை அள்ளி கொடுப்பது வெட்டிச்செலவு என்று கண்டித்துள்ளார்.

இதுகுறித்து மணிசங்கர் அய்யர் கூறியதாவது:- டெல்லியில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு நடிகர்-நடிகைகளை அழைக்க கூடாது. அவர்களுக்கு கொடுக்கும் பணத்தை வேறு நல்ல காரியத்துக்கு செலவிடலாம்.

2006-ல் மெல்போர்னில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்தபோது ஐஸ்வர்யாராய் அழைக்கப்பட்டு இருந்தார். மொத்தம் 11 நிமிடங்கள்தான் நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ஐஸ்வர்யாராய் கலந்து கொண்ட நேரம் வெறும் 4 நிமிடங்கள் தான். அதற்காக அவருக்கு ரூ. 4 கோடி கொடுக்கப்பட்டது. சயீப் அலிகானும் அவ் விழாவுக்கு வந்தார். அவர் ரூ. 75 லட்சம் வாங்கினார். ஐந்தாயிரம் வருட பாரம்பரியம் உள்ள நாம் சினிமா என்ற குறுகிய வட்டத்துக்குள் முடங்க கூடாது.

நடிகர்களுக்கு கொடுக்கும் பணத்தை வேறு ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செலவிடலாம். இந்த மாதிரி கவர்ச்சி கொண்டாட்டங்ளுக்கு செலவிடக்கூடாது.

இவ்வாறு மணிசங்கர் அய்யர் கூறினார். ஆனால் போட்டி அமைப்பு குழுவினர் மணிசங்கர் அய்யர் கருத்தை ஏற்பதாக தெரியவில்லை. அவர்கள் நடிகர்-நடிகைகளை அழைத்து துவக்க விழாவை பிரமாதப்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

0 comments

விளம்பரம்

    Topsite

    More than a Blog Aggregator

    Followers

    Music Video of the Day

    Watch Tamil Movies

    Likexa FM தமிழ் வானொலி!