விளையாட்டுப் போட்டிகளில் போதைப்பொருள் பாவனைத்தடுப்பு தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வரும் தினத்தை சர்வதேச கிரிக்கெட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஐ.சி.சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கிரிக்கெட் வீரர்கள், தாம் எங்கு இருப்பார்கள் என்பது பற்றி மூன்று மாத கால அறிவித்தல் வழங்க வேண்டும் எனவும், அதன்படி திடீர் போதைப்பொருள் பாவனை பரிசோதனைகள் நடத்தப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
‘விளையாட்டு வீரர்களின் இருப்பிடத்தை அறிவிக்கும்’ இந்த ஒழுங்கு விதி, உலக போதைப்பொருள் பாவனை தடுப்பு முகவர் அமைப்பால் விளையாட்டுத்துறையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐ.சி.சி 2006ம் ஆண்டிலேயே இந்த ஒழுங்குவிதிகளுக்கு சம்மதம் அளித்திருந்த போதிலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமது பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த காரணங்களை காட்டி ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய அனைத்து பிரதான கிரிக்கெட் நாடுகளும் இந்த ஒழுங்கு விதிகளுக்கு ஏற்கனவே உடன்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments