புதிய தமிழ் வானொலி Likexa Fm-Likexa FM (Chennai) is live radio broadcasting station From Chennai in Tamil Language. Likexa FM Chennai is an internet broadcasting to reach internet using Tamil people arround the world. Likexa Tamil Radio delivers good audio quality. URL:http://www.likexafm.com/
இத்தாலியில் “மோனாலிசா” மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு?
இத்தாலியில் மோனாலிசா மாடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மாடலாக இருந்தார்.
கடந்த 1542-ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63-வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து, ஒரு பெண்ணின் மண்டை ஓடும், இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது.
அவை அநேகமாக மோனாலிசா படம் வரைய மாடலாக இருந்த லிசா கெரார்டினியினுடையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதை உறுதிப்படுத்த அவரது குழந்தைகளின் மண்டை ஓடுகளை வைத்து டி.என்.ஏ. சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இவர்களின், உடல்கள் புளோரென்ஸ் நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் புதைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் கையில் எதிர்காலம் என்ற கோஷத்திற்கு வள்ளுவர் கூறும் தகவல்..
சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது இளைஞர்களுக்கு முக்கியம் கொடுங்கள் என்ற கோஷம் வானைப்பிளந்தது..
அந்தக் கோஷமானது சற்று வயது கூடியவர்களை சமுதாயத்தில் தீண்டத்தகாதவர்களாக கருதக்கூடிய அருவமான எதிர்விசையை உருவாக்கியதையும் அவதானிக்க முடிந்தது…
இளைஞர்களின் கைகளில் எதிர்காலம் என்ற பிரலாபிப்பு வந்த பின்னர் வெளிநாடுகளில் உள்ள வயதானவர்களில் பலருடைய கோஷம் இப்படியேதான் கேட்கிறது..
ஒரு வேளை தமது காலத்து ஆற்றலாளர்களை காயடிக்க இத்தகைய கோஷத்தை இவர்கள் கிளப்புகிறார்களா.. அல்லது உண்மையாகவே இது ஆத்மார்த்தமான கோஷமா..? என்ற மயக்கம் சமுதாயத்தில் நிலவுகிறது..
இந்தநிலையில் இளைஞர்களின் கையில் எதிர்காலமென்றால் என்ன.. அதனுடைய உட்பொருளை பேரறிஞர்கள் எப்படி விளக்குகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
இறந்த காலம் என்பது முடிவடைந்துவிட்டது, எதிர்காலம் என்பது கானல் நீர்போல விரட்ட விரட்ட நகர்ந்து போவது என்றுமே கைகளுக்கு வராதது. நிஜம் என்பது நிகழ்காலம் ஒன்று மட்டும்தான் ஆகவே எதிர்காலம் ஒப்படைக்கப்பட முடியாதது என்பது பல மகான்களின் நூல்களில் காணப்படும் எளிமையான செய்தியாகும்.
இப்படியோர் உண்மை தெரிந்த காரணத்தாலோ என்னவோ மேலும் சிலர் ஒருபடி மேலே சென்று கோஷத்தில் உள்ள எதிர்காலத்தை வெட்டிவிட்டு முதலில் இளைஞர்களை பாராட்டுவோம் என்று சட்டெனக் கூறுகிறார்கள்.
வெளிப்பார்வைக்கு இது மிகச்சிறந்த வாதமாகத் தெரியும்..
ஆம்.. பாராட்டுவது உண்மையில் நல்ல விடயம்தான், அதில் யாரும் பிழைபிடிக்கமாட்டார்கள்.
இப்படி பிழை பிடிக்க முடியாத பாராட்டுதல்களை அடையாளம் காண வள்ளுவர் தனது குறளில் பல தகவல்களைத் தந்துள்ளார்.
இளைஞர்களை அதிரடியாக பாராட்டி மகிழ்வதோ அல்லது அவர்கள் கையில் எதிர்காலமென முழங்குவதோ சரியான வாதமல்ல என்று கூறும் வள்ளுவர் அதற்கான தனது வாதத்தை இப்படி முன் வைக்கிறார்.
ஒரு பிள்ளை கற்றவருடைய அவையில் இருப்பதற்குரிய தகுதியை சிறுபராயத்தில் இருந்தே வளர்த்து வரும் செயல் மட்டும்தான் இளைஞர்களை பாராட்டுவதற்குரிய உயர்ந்த செயல். அந்தச் செயலைச் செய்தால் கோஷங்கள் இல்லாமலே இளைஞன் பாராட்டு பெறும் இடத்திற்கு தானாக முன்னேறிவிடுவான்.
அப்படி அந்த இளைஞன் பாராட்டுப் பெறும் சிகரங்களைத் தொடும்போது.. அடடா இவனை இப்படியொரு சிகரத்திற்கு தூக்கிவிட்டவன் யாரென்று சமுதாயம் திரும்பிப் பார்க்கும் அப்போது அங்கே ஒரு முதியவன் பாராட்டுக்களுக்கு உரியவனாக நின்று கொண்டிருப்பான்.
எனவே பாராட்டு என்பது இளையோர்க்கு மட்டுமல்ல முதியோர்க்கும் இணைந்து வரவேண்டும், அதற்குரிய செயலை செய்வதே பாராட்டு என்பது வள்ளுவர் கருத்து.
மேலும் அவர் அதிலிருந்து ஒருபடி முன்னேறி ஒட்டுமொத்த திருக்குறளிலுமே இந்த விடயத்தையே எழுதாத செய்தியாகவும் பேசியிருக்கிறார்.
திருக்குறளில் அறம் – பொருள் – இன்பம் – வீடு ஆகிய நான்கு விடயங்களையும் பேசவந்த வள்ளுவர் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று விடயங்களை மட்டும் பேசுகிறார். அவர் வீடுபேற்றைப்பற்றி ஒரு குறள்கூட எழுதவில்லை..
ஏன் ?
அறம் பொருள் இன்பம் என்ற மூன்று நெறிகளையும் நீங்கள் சிறுவயது முதலே சரிவரக் கடைப்பிடித்தால், வீடுபேறு தானாக உங்களுக்கு வரும். அது ஒரு நாளில் வழங்கப்படும் அட்சய பாத்திரமல்ல.. அது ஒரு நெடிய பணி..
ஒரே நாளில்; இளைஞர் கையில் எதிர்காலம் என்போரும், இனி இளைஞரே எல்லாம் என்போரும் யாதொரு முயற்சியிலும் ஈடுபடாமல் வீடுபேற்றை பேசித்திரியும் மதம் பரப்பும் பிரிவினருக்கு ஒப்பானவராகவே இருப்பார்கள்.
எனவேதான் ஒருவருடைய வளர்ச்சியில் பங்குபற்றாத பாராட்டுக்கள் குறித்து, இளைஞர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பது திருக்குறள் தரும் எழுதப்படாத செய்தியாகும்.
இளைஞர்களைப் போற்றுவோம் என்போர் குழந்தைகளை வசதியாக மறந்துவிடுகிறார்கள். ஒரு குழந்தையின் மூளை என்ற – காட்டிஸ்க் – அதன் மூன்றில் ஒரு மடங்கை தாயின் கருவில் இருக்கும்போதே நிரப்பிவிடுகிறது. மிகுதி மூன்றில் ஒரு பங்கை ஐந்து வயதிற்குள் நிரப்பிவிடும். இறுதி மூன்றில் ஒரு பங்கை ஐந்து வயது முதல் இறக்கும்வரை மெல்ல மெல்லக் கற்க முயல்கிறது.
கடுகுபோன்ற ஓர் ஆலம் விதைக்குள் பிரமாண்டமான ஆலமரம் கிளைவிட்டு வளரக்கூடிய செய்தி பதியப்பட்டிருப்பதுபோலவே குழந்தைக்குள்ளும் அனைத்துச் செய்திகளும் பதிவாகி இருக்கிறது.
ஆகவே குழந்தைக்குள் பதியப்பட்டுள்ள தகவல்களை சுயமாக வெளிப்படச் செய்வது வரை அவர்களை வளர்தெடுக்கும் உதவிக்குள் அடங்கியிருப்பதுதான் இளைஞர் கையில் எதிர்காலம், இளைஞர்களைப் பாராட்டுவோம் என்ற பணிகளாகும்.
இளைஞர்களிடம் ஒப்படைப்பதென்பது யாரோ நான்கு இளைஞரைப் பிடித்துவந்து நீங்களே நமது செல்வங்கள் இதோ உங்கள் கையில் எதிர்காலம் என்று சொல்வதல்ல.. அது அவர்களைச் செல்வங்களாக்குவதற்குரிய நீண்ட செயற்பாடாகும்..
அந்தச் செயல் மேடையில் முழங்குவதற்குரியதல்ல.. சொல்வதற்குரியதல்ல.. செய்வதற்குரியதாகும்..
ஒவ்வொரு இளைஞனும் இதைப் புரிந்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்பது வள்ளுவர் போன்ற பேரறிஞர்கள் கருத்தாகும்.
நீங்கள் செல்பேசியை அதிகம் பயன்படுத்துபவரா? அதாவது ஒவ்வொரு நாளும் வணிக ரீதியாகவோ, கல்வித் தொடர்பாகவோ மற்றவர்களுடன் நீ்ண்ட நேரம் செல்பேசியில் பேசக் கூடியவரா? அப்படியென்றால் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் செல்பேசியில் நீண்ட நேரம் பேசினால் நமது காதைச் சுற்றி வெப்பம் தாக்குவதையும், அதனால் ஒரு விறுவிறுப்பு ஏற்படுவதையும் நிச்சயம் உணர்ந்திருப்போம். செல்பேசி வெப்பமடைந்திருப்பதையும் கவனித்திருப்போம். ஆனால், இவை யாவும் நமக்கு உடல் ரீதியான ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே என்பதை உலகம் உணர்ந்த அளவிற்கு இந்தியாவில் நாம் பெரிதாக உணரவில்லை.
உலக நாடுகளில் இதுபற்றிய உணர்தல் அதிகரித்துள்ளது. “செல்பேசியில் இருந்து வெளிப்படும் நுண்ணிய ஒலி அலைகளால் உருவாகும் ஒருவித கதிர் வீச்சு நமது உடலில், குறிப்பாக நமது மூளையில் செயல்பட்டுவரும் உயிரணுக்களை பாதிக்கின்றன, டிஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் (டிஎன்ஏ) என்றழைக்கப்படும் நமது மரபிண குணங்களை வார்த்தெடுக்கும் அணுக்களை அவை சம நிலை பிறழச் செய்கின்றன. இதன் விளைவாக புற்றுநோயை உருவாக்கும் கட்டிகளும், மற்ற நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களையும் உண்டாக்குகின்றன” என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
உலக சுகாதார அமைப்பும் இண்டர்ஃபோன் என்ற அமைப்பின் மூலம் 13 ஐரோப்பிய நாடுகளில் செல்பேசியை அதிகம் பயன்படுத்திவருவோர் 5,000 பேரிடம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. ஆயினும், செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசனையளிக்கக் கூடிய ஒரு தெளிவான வழிகாட்டல் அறிக்கையை அது வெளியிடவில்லை. ஆயினும், இண்டர்ஃபோன் ஆய்வும் பாதிப்பை உறுதி செய்துள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றுபடுத்தி ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ஜோயல் மாஸ்கோவிட்ஸ், “10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்று நோய் தாக்கும் வாய்ப்பு 30 விழுக்காடு அதிகம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
பிட்ஸ்பர்க் பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வும் இந்தப் பாதிப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், இங்கிலாந்தின் தேச புற்றுநோய்க் கழகம், “செல்பேசியைப் பயன்படுத்துவதால் அப்படிப்பட்ட ஆபத்து ஏதும் இல்லை” என்று கூறியுள்ளது. ஆயினும் செல்பேசியால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் ஆலோசனைகளில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.
உதாரணத்திற்கு, செல்பேசி பயன்படுத்துவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க ஒரு சட்டத்தையே பிரான்ஸ் நாட்டின் இரு அவைகளும் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளன. தொலைத் தொடர்பு ஒலிக்கற்றைகள் மூளையைப் பாதிக்காவண்ணம், புதிதாக செல்பேசியை வாங்குவோர் அனைவருக்கும் காதில் வைத்துப் பேசக்கூடிய ஏர்ஃபோன்களை சேர்த்தே விற்குமாறு தயாரிப்பாளர்களை அந்நாடு அறிவுறுத்தியுள்ளது (இதன் விளைவாகவே இப்போதெல்லாம் நாம் செல்பேசி வாங்கினால் அதன் கூடவே இலவசமாக ஒரு ஏர்ஃபோன்கள் அளிக்கப்படுகிறது. அது வளர்ந்த நாடுகளில் கட்டாயம். இங்கு ஒரு கூடுதல் வசதியாக அளிப்பதுபோல் கொடுக்கிறார்கள்).
அதுமட்டமல்ல, செல்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை (குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது போன்ற) வாசகங்களுடன் விற்குமாறும், செல்பேசியை பயன்படுத்தும்போது எந்த அளவிற்கு நீங்கள் ஒலிக்கற்றை கதிர் வீச்சிற்கு ஆளாகின்றனர் என்ற அளவை (specific absorption rate - SAR) குறிப்பிடும்படியும் பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
“செல்பேசிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை என்கிற ஒரு அடிப்படையே அது பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சியல்ல” என்று பிரான்ஸ் அறிவியலாளர் பேராசிரியர் டேனியல் ஊபர்ஹெளசன் கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சுற்றுச்சூழல் நல அறக்கட்டளை எனும் அமைப்பை நடத்திவரும் அறிவியலாளரான முனைவர் தேவ்ரா டேவிஸ் ‘டிஸ்கனக்ட்’ எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். “செல்பேசியில் வெளியாகும் கதிர்வீச்சு தொடர்பான உண்மைகள், அவைகளை மறைக்க செல்பேசி தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் புத்தகம் மேற்கத்திய உலகில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புத்தகத்தில் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய முழு விவரங்களையும் அளித்துள்ளார் தேவ்ரா டேவிஸ்.
சுற்றுச் சூழல் மற்றும் தனி மனித நடத்தைகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் முனைவர் பிரான்ஸ் அட்கோஃபர், செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது மரபுத் தன்மையை பாதிக்கிறது என்றும், மூன்றாம் தலைமுறை செல்பேசிகள் (3G), இரண்டாம் தலைமுறை செல்பேசிகளை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.
செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அதன் தயாரிப்பாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது சுதந்திரமான ஆய்வுகளில் இருந்து தெரியவருகிறது.
ஒரு நாளைக்கு 2 முதல் 4 மணி நேரம் செல்பேசியைப் பயன்படுத்துபவரின் உயிரணுவை விட, செல்பேசியைப் பயன்படுத்தாதவரின் உயிரணு பலமாக உள்ளது.
சாதாரணமாக தண்ணீர் தொட்டிகளில் விழுந்த எலி, மிகச் சுலபமாக நீந்தி வெளியே வந்து விடுகிறது. ஆனால் செல்பேசியின் கதிர் வீச்சிற்கு ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக்கப்பட்ட எலியானது, தண்ணீர் தொட்டிக்குள்ளேயே சுற்றி சுற்றி நீந்தி வருகிறது. இதற்குக் காரணம் அதன் மரபணுவில் ஏற்பட்ட பாதிப்பு அதன் இயல்பான திறனை மழுங்கடித்துவிட்டதே.
தங்கள் நாட்டில் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. இரஷ்யா, இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், இஸ்ரேல், ஃபின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனை பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளன.
இஸ்ரேல் நாட்டின் பல் மருத்துவர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், கன்னத்தில் ஏற்படும் மிக அரிதான புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்களில் ஐந்தில் ஒருவர் மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்தி வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எந்த அறிவியலாளர் ஆய்வு மேற்கொண்டாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதியுதவியை தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுத்தியுள்ளன செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள். அதுமட்டுமின்றி, அப்படிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட பல அறிவியலாளர்கள் ஆய்வு அமைப்பில் இருந்தே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்பதையும் தேவ்ரா தனது புத்தகத்தில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
இவையணைத்தையும் குறிப்பிட்ட தேவ்ரா டேவிஸ், செல்பேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை!
இன்றைய நவீன யுகத்தில் செல்பேசியின்றி வாழ்வில்லை என்ற நிலையில் உள்ள நாம் அதனை காது வைத்து பேச வேண்டாம் என்றும், காதில் பொறுத்திக்கொண்டு பேசக் கூடிய ஒலி வாங்கிகளைப் (ஏர்ஃபோன்கள்) பயன்படுத்தியே பேசுமாறும் கூறியுள்ளார்.
செல்பேசிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து உலக நாடுகள் உரிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அது தொடர்பான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே செல்பேசியை பயன்படுத்துவோர் கீழ்கண்ட பாதுகாப்பான வழிகளை கையாள வேண்டும்:
1. செல்பேசியை ஏர்ஃபோன்களுடன் மட்டுமே பயன்படுத்துங்கள்
2. அதனை பேண்ட் பாக்கட்டிலோ, சட்டை பாக்கெட்டிலோ தொடர்ந்து நீண்ட நேரம் வைத்திருக்காதீர்கள் (பயண நேரத்தில் மட்டும் அவ்வாறு வைத்திருப்பது தவிர்க்க இயலாதது).
3. அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும்போது அதனை மேசையின் மீது வைத்திருங்கள்.
4. இயன்ற அளவிற்கு செல்பேசியில் பேசுவைத் தவிர்த்து, குறுஞ்செய்திகளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
புற்று நோயை வருவதைத் தடுக்க, அது உருவாகும் சூழல் அமையாமல் தடுப்போம் என்று கூறுகிறார் தேவ்ரா டேவிஸ்.
மிகச் சரியான வழிதான்.
தாய் பாடிய தாலாட்டு தான் இளையராஜாவை உலகறிய செய்தது என்று இசையமைப்பாளரும், இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் தெரிவித்தார்.
குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் இறுதிநாள் விழா நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவி்ல் திரைப்பட இயக்குனர் கங்கை அமரனின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
குடும்பத்தில் நிலவும் மகிழ்ச்சி, துக்க சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படும் திறன் படைத்த ரோபோக்களை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
உலக அளவில் இன்று முன்னணியில் இருக்கும் ஆராய்ச்சிகளில் நானோ தொழில்நுட்பத்துக்கு அடுத்த படியாக ரோபோ ஆராய்ச்சியை குறிப்பிடலாம். இந்த ஆராய்ச்சியில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது. அந்நாட்டின் ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ள அசிமோவ் ரோபோ உலகப் புகழ்பெற்றதாகும். இந்நிலையில் உயிருள்ள ஜீவன் போல சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் ‘ஐசாய் 1’ என்ற ரோபோவை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது விஞ்ஞானக் கற்பனை அல்ல.. நிஜம் என்கிறார் இந்த ரோபாவை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டீகோ கார்சியா. மனிதர்களுக்கு ஒரு துணையாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உயிருள்ள நபர் போல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலும், முடிவுகளை தாமாக சுதந்திரமாக எடுக்கும் வகையிலும் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 25 செமீ உயரமும், ஒன்றரை கிலோ எடையும் கொண்ட இந்த ரோபோவுக்கு மனசாட்சியும் இருப்பதாக கார்சியா தெரிவித்துள்ளார்.
வீட்டில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது இந்த ரோபோ. தொழிற்சாலையிலிருந்து சந்தைக்கு வரும் சமயத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த ரோபோக்கள் வீடுகளில் உபயோகப்படுத்தும் போது, இரண்டே மாதத்தில் அந்தந்த வீட்டு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் என்கிறார் இதனை வடிவமைத்த கார்சியா.
இன்செப்ஷன் ஆங்கில படம் உலகம் முழுவதும் ரிலீசாகி ஒரு வாரத்தில் ரூ. 9,900 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இது “டைட்டானிக்” படத்தை மிஞ்சிய வசூலாகும். கனவுகளை திருடுவதை தொழிலாக கொண்ட ஒருவனைப்பற்றிய அறிவியல் கதையே இப்படம். இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழில் இதற்கு கனவு வேட்டை என பெயரிட்டு ராம.நாராயணனின் தேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.
அவதார் போன்ற படங்களையும் இதே நிறுவனம் தான் வெளியிட்டது. இன்செப்ஷன் படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இந்த படம் பற்றி கருத்து தெரிவிக்கையில், மற்ற உலகில் உள்ள இயக்குனர்களை பொறாமை கொள்ள வைக்கும்படி “இன் செப்ஷன்” படம் உள்ளது என்று கூறியுள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளில் போதைப்பொருள் பாவனைத்தடுப்பு தொடர்பான புதிய ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வரும் தினத்தை சர்வதேச கிரிக்கெட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஐ.சி.சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கிரிக்கெட் வீரர்கள், தாம் எங்கு இருப்பார்கள் என்பது பற்றி மூன்று மாத கால அறிவித்தல் வழங்க வேண்டும் எனவும், அதன்படி திடீர் போதைப்பொருள் பாவனை பரிசோதனைகள் நடத்தப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
‘விளையாட்டு வீரர்களின் இருப்பிடத்தை அறிவிக்கும்’ இந்த ஒழுங்கு விதி, உலக போதைப்பொருள் பாவனை தடுப்பு முகவர் அமைப்பால் விளையாட்டுத்துறையில் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐ.சி.சி 2006ம் ஆண்டிலேயே இந்த ஒழுங்குவிதிகளுக்கு சம்மதம் அளித்திருந்த போதிலும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமது பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த காரணங்களை காட்டி ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய அனைத்து பிரதான கிரிக்கெட் நாடுகளும் இந்த ஒழுங்கு விதிகளுக்கு ஏற்கனவே உடன்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.